பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..??

பைஷாவில் பரபரப்பு : தடுப்பு வேலியை உடைத்த பேருந்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர் : பைஷா பகுதியில் ஒரு இரட்டை அடுக்குப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியை உடைத்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்தப் பேருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே வந்த வாகனத்தின் மீது மோதியதில் அங்கு விபத்தியே நடந்துள்ளது.

இந்த சம்பவம் ஆனது நேற்று (ஏப்ரல் 18) பிற்பகல் சுமார் 2:15 மணியளவில் பாசிர் ரிஸ் பாதை 1 – ல் நிகழ்ந்துள்ளது.

அங்கு நடந்த விபத்தானது முகநூலில் காணொளியாகப் பதிவேற்றப்பட்டது. அந்த காணொளியில் ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் செல்லும் ஒரு சிவப்பு நிற கார் மீது மோதுவது போன்று தெரிகிறது.

இந்த மோதலில் பேருந்து சற்று பின்னோக்கி உருண்டு, அருகில் இருந்த பாதையில் சென்று ஒற்றை அடிக்குப் பேருந்து மீது மோதியுள்ளது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையும் அந்த காணொளியில் காண முடிகிறது.

இந்த சம்பவம் குறித்து குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கும் (SCDF), காவல்துறையினருக்கும் பிற்பகல் 2:30 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக SCDF கூறியுள்ளது.

இந்த விபத்தில் 2 பேருந்துகள், 2 கார்கள் மற்றும் ஒரு லாரி சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் 55 வயது பெண் கார் ஓட்டுநர், மற்றொருவர் 33 வயது பெண் ஓட்டுநர் மற்றும் 47 வயது ஆண் லாரி ஓட்டுநர் எனவும் காவல்துறை கூறியுள்ளது.மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பொழுது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

காவல்துறையின் விசாரணைக்கு இரண்டு அடுக்கு பேருந்து ஓட்டுநரான (71 வயது) உதவி வருகிறதாகவும், விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து SBS டிரான்சிட் செய்தி தொடர்பாளர் சென் குய்ஜென் கூறியதாவது: விபத்தில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநருக்கோ அல்லது அதிலிருந்து பயணிகளுக்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் காயமடைந்த 3 நபர்களும் மற்ற வாகனங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் காயமடைந்த 3 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் நிறுவனம் தொடர்பில் இருப்பதாகவும் தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் எனவும் ஜென் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட தொந்தரவு மற்றும் சிரமத்திற்காக பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் ஓட்டுநர்களிடம் நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என SBS டிரான்சிட் நிறுவனம் மன்னிப்பு கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK