சிங்கப்பூரில் கார் மோதி விபத்து..!! ஓட்டுநர் நிலை என்ன..??
சிங்கப்பூர்: செங்காங் ஈஸ்ட் அவன்யூ, கம்பஸ்வேல் ரோடு சந்திப்பில் மார்ச் 6ஆம் தேதி மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் தலைகீழாக கவிழ்ந்து அதன் ஓட்டுனரும் அவருடன் இருக்கையில் அமர்ந்த மற்றொருவரும் விளைந்தனர் கார் இடது பக்கம் சுழன்று பின்னர் நின்றதை காணொளி பதிவில் தெரியவந்தது.
இந்த விபத்தில் கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சுயநினைவுடன் இருந்ததாக தெரியவந்தது. உடனே அவர்கள் சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டனர்.
சிறு காயங்களுக்காக முதலுதவி சிகிச்சை பெற்ற மற்ற இருவர் மருத்துவமனைக்கு அழைத்த போது வர மறுத்து விட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.