சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! 81 வயது மூதாட்டி காயம்..!!

சிங்கப்பூரில் குயின் தெருவில் ஃபோர்த் ரோடு அருகே மே 10-ஆம் தேதி அன்று கார் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 81 வயதான மூதாட்டி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வாட்டர்லூ தெருவில் இருந்து பென்கூலன் தெருவை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு கார் சாலையில் நடந்து சென்ற பாதசாரி மீது மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மோதியதில் அந்தப் பாதசாரிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தங்களுக்கு மே 10-ஆம் தேதி என்று பிற்பகல் 2:35 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.

இந்த விபத்திற்கு காரணமான கார் ஓட்டுநர் (49 வயது ) காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) அன்று பிற்பகல் 2:40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF படையினர், விபத்தில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்த போது மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார்.

வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து வெளியேறும் போது ஓட்டுநர் அதிவேகமாக சென்ற காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாக, இந்த விபத்தை நேரில் கண்ட ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சாலை விபத்தை நேரில் பல பேர் பார்த்துள்ளனர்.

இந்த செய்தியைப் பதிவிட்ட இணையவாசி, அந்த பதிவில் கார் ஓட்டுநரிடம் அவரது விவரங்களைக் கேட்டபோது அவர் தான் கொடுத்ததாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பினர் அந்த விபத்திற்கு பிறகு ஓட்டுநர் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை எனவும், அவர் பற்றிய எந்த விவரங்களையும் தங்களிடம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK