பிடோக் பகுதியில் காசநோய் பரிசோதனை..!! முடிவுகளை வெளியிட்ட CDC..!!
சிங்கப்பூர்: பிடோக் வட்டார பகுதிகளில் முதற்கட்ட காசநோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை தொற்றுநோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு ஆணையம்(CDC) இன்று (மே 13) வெளியிட்டுள்ளது.
இந்த மாதம் (மே) 2 – ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை 3,169 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 85.1% பேருக்கு இந்த பரிசோதனையில் காசநோய் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது.
14.9% பேருக்கு (அதாவது 473) காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கூடுதல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்துள்ளது.
பரிசோதனையில் சிலரின் ரத்த மாதிரிகள் நோய் இருந்தாலும் உண்மையில் அவர்களிடம் காச நோய் அறிகுறி இல்லை என்பது போல முடிவு காட்டும்.அவர்களால் மற்றவர்களுக்கு அந்த நோயைப் பரப்ப முடியாது என்று CDC பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.
Heartbeat@Bedok, பிளாக் 216 பிடோக் ஈரச்சந்தை மற்றும் பிடோக் சிங்கப்பூர் பூல்ஸ் போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி செல்பவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே எடுப்பவர்களின் முடிவுகள் தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும் எனவும், பரிசோதனையில் எதிர்மறை முடிவு வருபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவிப்பு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.