சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..??

சிங்கப்பூரில் DTL ரயில் சேவையில் மாற்றம்..!! எப்போது முதல்..??

சிங்கப்பூர் டவுன் டவுன் லைன் ரயில் (Downtown Line-DTL) சேவை நாளை (ஜூலை 10) முதல் 9 வாரங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படுகிறது.

டவுன் டவுன் லைன் 3ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த சோதனை ஓட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த முன்னதாகவே மூடுதல் மற்றும் தாமதமாக திறத்தல் (ECLO) நடைமுறைப்படுத்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் SBS Transit தெரிவித்துள்ளன.

ஜூலை 10,17, 24,31 | ஆகஸ்டு 7,14, 21, 28 மற்றும் செப்டம்பர் 4 (வெள்ளிக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு ரயில் சேவைகள் வழக்கமான நேரத்திற்கு முன்பாக இரவு 11:30 மணிக்கு நிறைவடையும்.

ஜூலை 11, 18 ,25 | ஆகஸ்ட் 1, 8, 15, 22,29 மற்றும் செப்டம்பர் 5 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில் காலை ரயில் சேவைகள் வழக்கமான நேரத்திற்கு பதிலாக காலை 8:30 மணிக்கு தாமதமாக தொடங்கும்.

புக்கிட் பாஞ்சாங் முதல் எக்ஸ்போ (Expo) வரையிலான ஒட்டுமொத்த டவுன் டவுன் லைன் (DTL) வழித்தடத்திலும் இந்த நேரம் மற்றும் அமலில் இருக்கும் என LTA தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை வேளையில் பயணம் செய்யும் பொது மக்களின் வசதிக்காக டவுன்டவுன் லைன் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்று சிற்றுந்து(Shuttle Bus) சேவைகள் இயக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டின் (2026) பிற்பாதியில் திறக்கப்பட உள்ள எக்ஸ்போ முதல் சங்கே பெடோக் வரையிலான புதிய நீட்டிப்புப் பாதையையும், புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையையும் இணைத்துச் சோதிப்பதற்காக கூடுதல் பொறியியல் நேரங்கள் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.