சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் லாவண்டர் ஸ்திரீட்டில் உள்ள CT Hub 2 வணிக வளாகத்தில் ஒரு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. அதில் 42 வயது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நேற்று (ஜூலை 11) காலை 114 லாவண்டர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள CT Hub 2 வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள உணவகப் பகுதியில் இந்த விபரீதமானது நிகழ்ந்துள்ளது.

காலை 9:35 மணி அளவில் அங்குள்ள ஒரு இரவு நேரக் கேளிக்கை விடுதிக்கு அருகே சத்தம் மற்றும் பெண்ணின் அலறல் கேட்டு அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

முதற்கட்ட தகவல்களின்படி, அங்கு ஒரு பெண்ணுக்கும் ஒரு நபருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அந்த ஆடவர் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர், சுயநினைவோடு இருந்த அந்த நபரை மீட்டு டான் டோக் செங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

காவல்துறை அந்த பகுதியை முழுமையாகத் தடுத்து, தீவிர சோதனை நடத்தினர்.அதில் சம்பவ இடத்திலிருந்து சிறிய ரக வாள்/ கத்தி போன்ற ஒரு ஆயுதத்தை கைப்பற்றினர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் சம்பவத்தின் அதிர்ச்சியால் அங்கிருந்து அவருக்கு மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.