ஆசியாவில் உள்ள சில நிலக்கரி ஆலைகளை மூட முடிவு..!! காரணம் என்ன..??

ஆசியாவில் உள்ள சில நிலக்கரி ஆலைகளை மூட முடிவு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர் நடத்திய ‘TRACTION’ ஆய்வின் முடிவில் ஆசியாவில் உள்ள நிலக்கரி ஆலைகளில் மூன்றில் ஒரு பங்கை குறைக்க வேண்டும் என்று அனைத்து உலக கூட்டணியுடன் இணைந்து முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்த வெப்பநிலை உயர்வை 1 1/2 டிகிரி செல்சியஸ் க்குள் வைத்திருக்க மாணவற்றை செய்வதற்காக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது.

என்ன காரணம்?
கரியமில வாயு வெளியேறுவதால் உலகம் அதிகமாக வெப்பமடையும்.

எனவே இதை சரிபடுத்துவதற்காக ஆசிய நிலக்கரி சுரங்கங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுவதற்கு சிங்கப்பூர் ஆனது திட்டமிட்டுள்ளது.

இதனால் கரியமில வாயு வெளியேறுவது சற்று குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த முறையில் மிச்சப்படுத்தப்பட்ட கரியமில வாயு ‘Transition Credits’ என்ற பெயரில் பிற நாடுகளுக்கு விற்கப்படும்.

இந்தத் திட்டத்தை சிங்கப்பூர் நாணய வாரியம் ஆனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கி இருக்கிறது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு போதிய நிதி இல்லை என வாரியத்தின் முன்னால் நிர்வாக இயக்குனரும் பருவநிலை மாற்றத்திற்கான சிங்கப்பூர் தூதருமான ரவி மேனன் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 1.5 ட்ரில்லியன் டாலர் நீதி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக இவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நிலையை சமாளிப்பதற்காக வாரியம் Fast-P என்ற திட்டத்தை உருவாக்கி இதுவரை 510 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது.

இதன் மூலமாக ஆசியாவில் மூன்று கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். ஆண்டுதோறும் ஒரு மில்லியன் டன் வரை கரியமில வாயுவை குறைப்பதற்காக இந்த திட்டங்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் நிலக்கரி ஆலைகளை குறைப்பதன் மூலமாக ஆண்டுதோறும் ஒரு பில்லியன் டன் வரை கரியமில வாயு வெளியேறுவதை குறைக்க வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சாலைகளில் இருந்து 220 மில்லியன் கார்களை நீக்குவதற்கு இது சமம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK