DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..??

DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: DBS வங்கி அதன் சேவைகளில் சில மாற்றங்களை கொண்டுவர முயற்சித்துள்ளது. அவ்வப்போது எடுத்த தவறான நடவடிக்கையால் அதன் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியை துணை பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

மார்ச் 19ஆம் தேதி DBS வங்கியில் ஏற்பட்ட இடையூறு குறித்து விசாரணை மேற்கொண்டதன் மூலமாக இந்த தகவல் தெரியவந்தது.

சிங்கப்பூர் நாணய வாரியம், DBS வங்கியின் சேவை மாற்றும் நிர்வாக செயல்முறையை கண்காணித்த வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என துணை பிரதமர் கான் கூறினார்.

12 மாத காலகட்டத்தில் எதிர்பாராத தடங்கள் எதுவும் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு வங்கிகள் நான்கு மணி நேரம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விதிமுறை வங்கிகளின் முக்கிய சேவை அமைப்புகளுக்கு பொருந்தும் அந்த வகையில் வங்கிகளின் மீது சிங்கப்பூர் நாணய வாரியம் ஒரு தெளிவான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது.

வங்கி சேவையில் செயல் இழப்பு ஏற்படும்போது வங்கிகள் சேவைகளை விரைவாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் சரி செய்ய வேண்டும் என திரு கான் கூறினார்.

DBS வங்கியில் சிக்கல் ஏற்பட்டபோது சுமார் ஒரு மணி நேரம் சேவைகள் தடைப்பட்டு இருந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள் அவர்களின் நிதி இருப்புகளை பார்க்கவும் மின்னிலக்க வழிகள் மூலம் பணம் செலுத்தவும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுடைய பணமும் நிதி இருக்கும் பாதுகாப்புடன் இருப்பதாக DBS வாங்கி உறுதி அளித்திருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK