தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..??

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடப்பில் வரும் விதிமுறைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா..??

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6
வேட்பு மனு பரிசீலனை நாள்: ஏப்ரல் 7
வேட்ப மனுவை திரும்பப் பெற கடைசி நாள்: ஏப்ரல் 9
வாக்குப்பதிவு தேதி: ஏப்ரல் 23 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் தேதி: மே 4.

தேர்தல் முடியும் வரை நடப்பில் இருக்கும் சில முக்கிய விதிமுறைகள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
👉அரசு புதிய திட்டங்களையோ அல்லது சலுகைகளும் அறிவிக்க கூடாது.
👉கட்சிகள் பிரச்சாரத்தின் போது கட்சி நடவடிக்கைகளை தவிர தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

👉அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது.
👉அரசு விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது.
👉அமைச்சர்கள் பதவியில் எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்யக்கூடாது.
👉50,000 க்கும் மேல் ரொக்கமாக நீங்கள் எடுத்துச் செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்கள் தேவைப்படும்.

இந்த தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் தேர்தல் முடியும் வரை நடப்பில் இருக்கும்.

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு நமது இணையதள பக்கத்தில் www.sgtamilan.com தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK