பறிமுதல் செய்யப்பட்ட கருவிகள் மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
வடமாநிலங்கள் வழியாக அந்த போதைப்பொருட்கள் கடத்தப்பட்டிருக்க கூடும் என்று புக்கிட் ஆமான் போதைப் பொருள் குற்ற விசாரணைப் பிரிவு இயக்குனர் ஹூசேன் ஒமார் கான் கூறியுள்ளார்.
பூச்சோங் பட்டறையிலும், செராஸ் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 31 வயது மற்றும் 33 வயது உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஃபென்டனைல் திரவம் அடங்கிய 400 மின் சிகரெட் கருவிகள், 612.12 கிலோகிராம் எடையுள்ள மெத்தெம் ஃபெடமின், 6.4 கிலோகிராம் எடையுள்ள எரிமின், 5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.