பரபரப்பு…!! ஹாலந்து சாலையில் பயங்கர விபத்து..!!!

பரபரப்பு...!! ஹாலந்து சாலையில் பயங்கர விபத்து..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று(06.03.26) காலை ஹாலந்து சாலையில் ஒரு பொதுப் பேருந்தும், ஒரு லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்து பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தற்போது 62 வயது பேருந்து ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.

சமூக ஊடக தளமான சியாவோஹோங்ஷுவில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பேருந்து SMRT பேருந்து என்பது தெரிகிறது.பேருந்தின் பின்புற கதவு மற்றும் ஜன்னல்கள் உடைந்திருந்தது.

இந்த விபத்து இன்று(06.03.26) காலை உலு
பாண்டன் சாலையை நோக்கிச் செல்லும் ஹாலந்து சாலையில் ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த 57 வயது ஆண் பயணி ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்,21 வயது பெண் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK