யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!!
சிங்கப்பூர்:யிஷூனில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஜனவரி 24ஆம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது.
பிளாக் 120 இன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்து எரிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து மாலை 4:50 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் குழாய்களின் மூலம் தீயை கட்டுப்படுத்தினர்.