சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..??

சிங்கப்பூரில் HDB குடியிருப்பில்  தீ விபத்து..!! தீயை அணைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை என்ன..??

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 14) மதியம் போனா விஸ்டாவில் உள்ள ஹாலண்ட் சாலை பிளாக் 9 இல் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும், புவனா விஸ்டாவின் பொறுப்பாளரும், சிங்கப்பூரின் பொது சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சருமான சான் சுன் சிங் ஹாலண்ட் சாலையில் உள்ள பிளாக் 9-ல் ஒரு குடியிருப்பின் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நேற்று (ஜூன் 14) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அப்பதிவில் இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் யாரும் இல்லை எனவும் அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

குடியிருப்பில் இருந்த குடியிருப்பளர்கள் உடனடியாக குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு இது குறித்த தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தங்களுக்கு பிற்பகல் 3:30 மணி அளவில் தகவல் கிடைத்ததாக SCDF வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

8-வது மாடியில் உள்ள குடியிருப்பில் படுக்கையறையில் இருந்த பொருட்களில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

SCDF வீரர்கள் கதவை உடைத்து அறையினுள் நுழைந்து நீர்த்தாரை பீரங்கி மற்றும் அழுத்தப்பட்ட காற்று நுரை முதுகுப்பை ஆகியவற்றை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 25 குடியரப்பாளர்களைக் காவல்துறை மற்றும் குடிமை பாதுகாப்புப் படையினர் வெளியேற்றியுள்ளனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த காவல்துறையினர் தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK