சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி மோசடிகள் 2025 இல் அதிகரித்துள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!
சிங்கப்பூரில் கிரிப்டோ கரன்சி பரிமாற்றங்கள் தொடர்புடைய மோசடிகள் கடந்தாண்டு(2025) அதிகரித்து உள்ளதா? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலான நேரங்களில் மோசடி செய்பவர்கள் அதிகமாக அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள் மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.
மக்கள் ஏமாறுவதற்கு காரணம் என்ன? பெரும்பாலான நேரங்களில் சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் அல்லது வேலை வாய்ப்புகள் தொடர்பிலான விளம்பரங்களை பார்த்து ஏமாற்றம் அடைகிறார்கள்.
எந்த வழிகளில் மோசடி செய்கிறார்கள்? கிரிப்டோகரன்சி கணக்குகளை திறந்து அதில் கிரிப்டோகரன்சியை வாங்க வேண்டும் என்று பார்வையாளர்களை கவர்ந்து அதன் மூலமாக மோசடி செய்கிறார்கள்.
மேலும் வாங்கிய கிரிப்டோ கரன்சியை ஒரு நியமிக்கப்பட்ட கணக்கு உள் நுழைவு தகவல் மற்றும் அதற்கான சொற்றொடர்களை ஒப்படைக்கு மாறும் கேட்கிறார்கள்.
மேலும் இந்த தகவலை பெற்றவுடன் உங்களுடைய கணக்கு மூலமாக நீங்கள் கிரிப்டோ கரன்சியை பெற முடியும் என்று மோசடி செய்பவர்கள் கூறி பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை அபகரிக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை கூறியது: இது போன்ற மோசடி செய்பவர்களிடம் பொதுமக்கள் ஏமாறினால் அவர்கள் இழந்த பணத்தை மீட்பது என்பது சற்று கடினமானது என காவல்துறையினர் கூறுகின்றனர். இதன் மூலம் பொதுமக்கள் சொத்துக்களை இழப்பது அதிகம் எனவும் இதனால் எந்த ஒரு போலியான முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
தெரியாத ஒரு நபர் உங்களுக்கு கிரிப்டோ கரன்சி கணக்கை எப்படி தொடங்குவது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்தால் அது ஏமாற்று வேலை என்று நீங்கள் உணர வேண்டும். ஏனென்றால் கிரிப்டோ கரன்சிக்கு அடிப்படை மதிப்புகள் என்று ஒன்று கிடையாது எனவும் அதில் முதலீடு செய்தால் நஷ்டம் வரும் எனவும் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
2025 ஆண்டிற்கான கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட $182.2 மில்லியன் இழந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.