மாணவர்கள் உருவாக்கிய மின் புத்தகம்… ஏன் இவ்வளவு முக்கியம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் காபி கடையின் பான விற்பனை நிலையம், சந்திர புத்தாண்டை முன்னிட்டு தற்காலிக விலை உயர்வை அறிவித்துள்ளது. சந்திர புத்தாண்டின் 28 வது நாள் (15.02.26)முதல் 3 வது நாள் வரை, பானங்களின் விலை S$ 0.30 முதல் S$0.50 வரை அதிகரிக்கும் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
இன்று காலை ஹாக்கர்ஸ் யுனைடெட் – டபாவோ 2020 என்ற சமூக வலைதளக் குழு பக்கத்தில் ஒரு இணைய பயனர் இந்த அறிவிப்பின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், காபி உள்ளிட்ட பானங்களுக்கு S$0.30 உயர்வும், ஒவ்வொரு பீர் பாட்டிலுக்கும் S$0.50 உயர்வும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு வெளியானதும் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்தன. சிலர், “இன்னும் புத்தாண்டே வரவில்லை.ஏற்கனவே விலை உயர்த்திவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். மேலும் சிலர், “s$0.10 கூட இல்லை, நேரடியாக S$0.30 உயர்வா?” என்று ஆத்திரம் தெரிவித்தனர்.
சில இணைய பயனர்கள், அங் மோ கியோ தொகுதியின் பொறுப்பாளரான மூத்த அமைச்சர் லீ சியென் லூங் அவர்களிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனால் விவாதம் மேலும் தீவிரமடைந்தது.
புகைப்படத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடலில், “ஜான்சன்9 உணவகம்” எனப்படும் அந்த காபி கடை, பிளாக் 332, அங் மோ கியோ அவென்யூ 1 இல் அமைந்துள்ளது தெரியவந்தது. பதிவு வெளியான மூன்று மணி நேரத்திலேயே 100க்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவாகியுள்ளன.
இருப்பினும், பெரும்பாலான இணைய பயனர்கள் இதை மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினையாகவே கருதினர். “வாங்க விருப்பமில்லையெனில் வாங்க வேண்டிய அவசியமில்லை” என்றும், “வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் பண்டிகை காலம், சிறிய உயர்வை புரிந்துகொள்ளலாம்” என்றும் சிலர் கடை உரிமையாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.