மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் பயங்கரம்: வெடிபொருள் குடோனில் வெடி விபத்து..!! 45 பேர் பலி..!

மியான்மரில் வெடிபொருள் குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70 பேர் படுகாயம அடைந்தனர்.

மியான்மரின் வடகிழக்கு பகுதியில் நாம்லைம் நகர் உள்ளது. சீனா எல்லையில் இருந்து 3 கி.மீ. தெற்கே அமைந்திருக்கும் இந்த பகுதி தாங் தேசிய விடுதலைப் படையின் கட்டுப்பாட் டில் உள்ளது.

இந்த ஆயுதம் தாங்கிய பழங்குடி அமைப்பினர் மியான்மர் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இங்குள்ள காங்டப் கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் சுரங்கப்பணிகளுக்கான வெடி பொருட்கள் சேமித்து வைக்கப் பட்டு இருந்தது. இந்த குடோனில் நேற்று முன்தினம் (மே 31) காலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் கட்டிடத்தில் இருந்த வெடிபொருள்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த கட்டிடம் மற்றும் அருகே இருந்த 100-க்கு மேற்பட்ட வீடுகள் பெரும் அளவில் சேதமடைந்தன.

அந்த பிராந்தியத்தையே உலுக்கிய இந்த பயங்கர சம்பவத்தில், கட்டிடத்துக்கு அருகே வசித்து வந்த 45 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 70-க்கு மேற்பட்டோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை மீட்டதுடன், காயமடைந்தவர்களையும் மீட்டு அனுப்பி வைத்தனர். மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது. பயங்கர வெடி விபத்தில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் மியான்மரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK