CBD-இல் ஈகோ டபாவோ திட்டம் அறிமுகம்..!! இன்கம் இன்சூரன்ஸ் மற்றும் WWF -ன் கூட்டு முயற்சி..!!
சிங்கப்பூரில் மத்திய வணிக மாவட்டத்தில் (CBD) ஈகோ டபாவோ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை இன்கம் இன்சூரன்ஸ் மற்றும்ம் WWF சிங்கப்பூர் ஆகியவை இணைந்து தொடங்கியுள்ளன.
இந்த திட்டத்தில் அலுவலக ஊழியர்கள் உணவை வெளியே எடுத்து செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடியப் பெட்டிகளை தேர்ந்தெடுக்க முடியும்.
மேலும் உணவு உண்ணுபவர்கள் பெட்டிகளுக்கு பணம் செலுத்த தேவையில்லை. அவற்றை திருப்பிக் கொடுக்கும்போது அவர்களுக்கு உணவு வவுச்சர்கள் (vouchess) அல்லது உணவு தள்ளுபடிகளை (Discounts) இந்தப் புதிய திட்டம் கொடுக்கும்.
மத்திய வணிகப்பகுதியில் உள்ள 8 உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் உணவு அல்லது பானங்களை பார்சல் வாங்க செல்லும்போது ஒரு குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பெட்டிகளையும், கோப்பைகளையும் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
பயனர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு உணவைக் கழுவாமல் நேரடியாக திருப்பிக் கொடுக்கலாம். திருப்பி கொடுப்பதற்கான 5 இடங்கள் பின்வருமாறு: 👉பேங்க் ஆப் பேங்க் சிங்கப்பூர் டவர் 👉ஒன் ராஃபிள்ஸ் பிளேஸின் தரைத்தளம் 👉OCBC சென்டர் 👉ரிபப்ளிக் பிளாசா 👉UOB பிளாசா 2.
தற்பொழுது இதில் 8 உணவு மற்றும் வணிக நிறுவனங்களில் செடெல் என்ற சங்கிலி தொடர்பில் மற்றும் காபி கடை , சா ரே ரே என்று கொரிய உணவகம், கிரீன்டாட் என்ற சைவ உணவகம், போக் தியரி என்ற சாலட் மற்றும் சிற்றுண்டி கடை மற்றும் அப்ஷாட் காபி என்ற காபி கடை ஆகியவையும் அடங்கும்.
வரும் 2 மாதங்களில் இதில் பங்கேற்கும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையை 15 ஆக அதிகரிப்பதே தற்போதைய நோக்கமென்று இதன் அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
உணவு உண்ணுபவர்கள் பொறுப்புடன் கொள்கலன்களைப் பயன்படுத்தவும் அவற்றை உடனடியாக திருப்பித் தரும் வகையிலும் கொள்கலன்களைத் திருப்பித் தருபவர்களுக்கு உணவு கூப்பன்களோ அல்லது தள்ளுபடிகளோ வழங்கப்படுகிறது.
கொள்கலன்களைத் திருப்பி தராதவர்கள் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட மாட்டார்கள். 5 மாதங்களுக்குள் 10,000 மேற்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பேக்கேஜிங் பெட்டிகளின் பயன்பாட்டைக் குறைப்பதை இந்த திட்டத்தின் நோக்கம் என இதன் ஏற்பாட்டளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இது குறித்த இன்கம் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி யாங் செங்சான் கூறியதாவது: இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் கழிவில்லாக் கொள்கையை வழங்குவதாகவும் இதன் மூலம் மக்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
WWF சிங்கப்பூர் அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஜூ சியோவோயுன் இத்திட்டம் குறித்து கூறியதாவது: இன்று அதிக அளவில் பேக்கேஜிங் கழிவுகள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்கள் வடிவமைப்பு முறையிலிருந்து உருவாகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்காக நாங்கள் மூலப் பொருட்கள் பயன்படுத்தப்படும் மற்றும் மறுபயன்படுத்தப்படும் விதத்தையும், இந்த அமைப்பை எவ்வாறு சுழற்சி முறையில் பேணுவது என்பதையும் மறுபரிசீலனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.