சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!!

சட்ட நெறிமுறைகளை மீறிய வழக்கறிஞர்..!!!யாங் யாவோஹுயின் தகுதி கேள்விக்குறி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வழக்கறிஞராக இருக்கும் 35 வயதான யாங் யாவோஹுயின் சட்டப்பூர்வ தகுதியை ரத்து செய்யுமாறு சிங்கப்பூர் சட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இவர் 2022 ஆம் ஆண்டு பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையில் ஜாமீனில் தப்பி ஓடிவிட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் நீதித்துறை மற்றும் ஆட்டார்னி ஜெனரலின் அலுவலகத்தை அவமதித்ததாகவும், கடுமையான குணநலன் பிரச்சினைகள் இருப்பதாகவும் சட்ட சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (11.09.25) நடந்த மூன்று நீதிமன்ற விசாரணைகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.மேலும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வழக்கறிஞரையும் நியமிக்கவில்லை.

சட்ட சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டேனி ஓங், நீதிமன்ற அறிவிப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு யாங் யாவோஹுய் பதிலளிக்கவில்லை என்றும், சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பாரா என்பதைக் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

மேலும் வழக்கறிஞர் சங்கம், அவரது தவறான நடத்தை, நிதி முறைகேடு மற்றும் வாடிக்கையாளர் வழக்குகளை சரியாக கையாளாமை காரணமாக, யாங் யாவோஹுயின் வழக்கறிஞர் தகுதியை ரத்து செய்வதே பொருத்தமான தண்டனையாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளது.

தீர்ப்பாயம் விசாரணை முடிந்த பின்னர் முடிவை அறிவிக்க உள்ளது. மனு அங்கீகரிக்கப்பட்டால், யாங் யாவோஹுய் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் வழக்கறிஞராக பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்.

மேலும், யாங் யாவோஹுய் அரசியல் கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.மத உணர்வுகளை புண்படுத்திய மற்றும் அரசு ஊழியர்களை அவமதித்த குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

ஜூலை 2022 இல், அவருக்கு வியட்நாமுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் சிங்கப்பூருக்குத் திரும்புவதற்குப் பதிலாக, அவர் சமூக ஊடகங்களில் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோருவதாக அறிவித்தார். குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறினர். அதைத் தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர்.

சிங்கப்பூர் அதிகாரிகள் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு நாடுகடத்த கோரிக்கை விடுத்தனர். யாங் யாவோஹுய் கடந்த ஆண்டு நவம்பரில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.மேலும் இது தொடர்பான நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan