சிங்கப்பூர் E-Pass பெறுவதில் சிக்கலா..? Deport ஆகாமல் இருக்க இதை தெரிந்துகொள்ளுங்கள்..!
சிங்கப்பூரில் வேலை தேடும் பெரும்பாலான இந்தியர்களின் முதன்மை தேர்வாக இருப்பது E-Pass (Employment Pass) ஆகும். ஆனால், சமீபகாலமாக E-Pass விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் (Reject), அப்ரூவல் கிடைத்த பின்னரும் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதும் (Deport) அதிகரித்து வருகின்றன. இதுகுறித்த முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு வழிகாட்டிகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
E-Pass நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது? காரணம் அறிதல்: Pass நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை MOM (Ministry of Manpower) நிறுவனத்திற்குத் தெரிவிக்கும். அதைச் சரிசெய்து ஏஜென்சி/நிறுவனம் ரீ-அப்ளை (Re-appeal) செய்ய முன்வந்தால் 2-வது முறை வாய்ப்பு தரலாம்.
கட்டணம் செலுத்த வேண்டாம்: Re-appeal செய்ய கூடுதல் சேவைக்கட்டணம் கேட்டால் அதைத் தவிர்க்கவும். மீண்டும் நிராகரிக்கப்பட்டால் உங்கள் பணம் தேவையின்றி வீணாகும்.
தொடர் விண்ணப்பங்களைத் தவிர்க்கவும்: தொடர்ந்து 3 அல்லது 4 முறை நிராகரிக்கப்பட்ட பின்னரும் விண்ணப்பித்துக்கொண்டே இருந்தால், அடுத்து எந்த பாஸ் அப்ளை செய்தாலும் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
வேறு பாஸ்களுக்கு அப்ளை செய்தல்: E-Pass நிராகரிக்கப்பட்டால், S-Pass, NTS Permit, PCM Permit அல்லது Shipyard Permit போன்ற பாஸ்களுக்குத் உடனடியாகவோ அல்லது ஏஜென்ட்டின் ஆலோசனைக்குப் பிறகோ அப்ளை செய்து பார்க்கலாம். ஆனால், 2-வது முறையும் நிராகரிக்கப்பட்டால் 6 மாதங்களுக்கு சிங்கப்பூர் முயற்சியை நிறுத்திவிட்டு வேறு நாடுகளுக்கு முயற்சிப்பது நல்லது.
E-Pass அப்ரூவல் வந்த பிறகு கவனிக்க வேண்டியவை: ஏஜென்ட் கட்டணம்: ஆரம்பத்திலேயே முழுத் தொகையையும் கட்டாமல், வெறும் விண்ணப்பக் கட்டணத்தை ($500 வரை) மட்டும் கொடுத்துவிட்டு பாஸ் வந்த பிறகு அடுத்தகட்ட தொகையைக் கொடுக்கவும்.
Refund பாலிசி (முக்கியம்): அப்ரூவல் வந்து சிங்கப்பூர் சென்ற பிறகு, ஒருவேளை உங்களை Deport செய்தால் எவ்வளவு தொகையை திருப்பித் தருவார்கள் என்பதை முன்கூட்டியே ஏஜென்ட்டிடம் தெளிவாகக் கேட்டுக்கொள்ளுங்கள். (அப்ளைங் சார்ஜ் மற்றும் நியாயமான ஏஜென்சி கட்டணத்தைத் தவிர்த்து மீதித் தொகையைத் திரும்பப் பெறுவது உங்கள் உரிமை).
அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தும் டிப்போர்ட் செய்யப்பட காரணம் என்ன? சம்பளம் மற்றும் தகுதி ஒப்பீடு: E-Pass அப்ரூவலுக்காக IPA (In-Principle Approval) தாளில் அதிக சம்பளம் ($10,000 – $12,000) போட்டு, ஆனால் அந்த நபருக்கு அதற்கான அனுபவமும் அறிவும் இல்லாத பட்சத்தில் குடிவரவு அதிகாரி (Immigration Officer) சந்தேகப்பட்டு திருப்பி அனுப்ப வாய்ப்புள்ளது.
சந்தேகம் மற்றும் பாதுகாப்பு: சிங்கப்பூர் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், காரணம் ஏதும் கூறாமலேயே திருப்பி அனுப்ப அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு.
ஆவணக் குறைபாடு: தேவையான அசல் ஆவணங்களை சரியாக கையில் கொண்டு செல்லாததும் டிப்போர்ட்டிற்கு ஒரு காரணமாக அமையலாம்.
முக்கிய அறிவுரை: சிங்கப்பூர் சென்ற பிறகு வாக்குறுதி அளிக்கப்பட்ட சம்பளம் அல்லது வேலை மறுக்கப்பட்டால், தைரியமாக MOM (Ministry of Manpower) அமைப்பை அணுகலாம். ஏமாறாமல் சரியான உரிமம் பெற்ற ஏஜென்சிகள் (Licensed Agencies) மூலமாக மட்டுமே முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.