சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்?

சிங்கப்பூரில் நாடாளுமன்ற துணை சபாநாயகர்கள் யார்?

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்ற அவை துணைத் தலைவர் ஸாக்கி முகமது இன்று(12/09/2025) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு 2 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திரு. கிறிஸ்டோபர் டி சௌசா மற்றும் திரு. சியா யூ சுவான் ஆகியோர் ஆவர்.

ஹாலந்து புக்கெட் திமா குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி சௌசா இதற்கு முன்பு 2020 முதல் 2025 வரை நாடாளுமன்றத்தில்
திருமதி ஜெசிகா டானுடன் துணை சபாநாயகராக இருந்துள்ளார்.

திரு சியா முதல்முறையாக துணை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நல்லாட்சியை கடைப்பிடித்தும், மக்களுடைய எதிர்பார்ப்புகளையும், கவலைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் இது ஒரு அர்த்தமுள்ள நாடாளுமன்ற உரையாடலை இருவருக்கும் ஊக்கமளிக்கும் உறுதியளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

துணை சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் போது சபாநாயகருக்கு உதவுகிறார். சபாநாயகர் இல்லாத நேரங்களில் நடக்கும் கூட்டங்களுக்கும் இவர் தலைமை வகிக்கிறார்.

முந்தைய நாடாளுமன்றத்தின் போது டாஸ்மெண்ட் உள்துறை மற்றும் சட்டம் தொடர்பான அரசாங்க நாடாளுமன்ற குழுவின் தலைவராக இவர் பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூரில் நீதி மற்றும் பொது மக்களுடைய நம்பிக்கை குறித்த கொள்கை விவாதங்களை அதிகமாக வலுப்படுத்தி உள்ளார்.

போதைப் பொருள்களுக்கு எதிரான சிங்கப்பூரில் நடந்த போராட்டத்தின் போது அதை வலுப்படுத்திட நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தார் என ஸாக்கி குறிப்பிட்டுள்ளார்.

திரு சியா சமூகம் மற்றும் குடும்ப மேம்பாட்டு குழுவின் தலைவராகவும் தேசிய மேம்பாட்டு கவுன்சிலின் துணை தலைவராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.

மலிவு விலை வீடுகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்காக காம்லிங்க் + உதவி, நடுத்தர குடும்பத்திற்கான சிறந்த கொள்கைகள் வரை நாடாளுமன்றத்தில் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக இவர் தீவிரமாக வாதாடியுள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட இரண்டு பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாடாளுமன்ற விவாதங்கள் சமநிலையாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கும் காலத்திற்கேற்றார் போல் நாடாளுமன்றத்தை அமைத்து மக்களுடைய உண்மையான தேவைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இவர்கள் செயல்படுவார்கள் என்று ஸாக்கி கூறினார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan