ஆங் மோ கியோவில் பரபரப்பு..!! LTA வெளியிட்ட போக்குவரத்து அப்டேட்..!!
சிங்கப்பூர்: ஆங் மோ கியோ அவென்யூ 3 மற்றும் அவன்யூ 10 சந்திப்பில் வலது புறம் திரும்பும் போது நேராக சென்று கொண்டிருந்த கார், மற்றொரு காரின் மீது மோதி அந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) ஒரு புதிய போக்குவரத்து திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இந்த சந்திப்பில் இந்த ஆண்டு (2026) ஜூலை மாதத்தில் 3 வண்ண வலதுபுற திருப்ப அம்பக்குறி போக்குவரத்து விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக LTA தெரிவித்துள்ளது.
3 வண்ண (சிவப்பு-மஞ்சள்-பச்சை அல்லது RAG) வலதுபுற திறப்பு அம்புச் சின்னம் கொண்ட போக்குவரத்து விளக்கு, பச்சை அம்பு ஒளிரும் போது மட்டுமே வாகனங்கள் வலது புறம் திரும்ப முடியும் என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் தவறான கணிப்பு அல்லது மனித பிழையால் ஏற்படும் விபத்துகளின் அபாயம் குறைக்கப்படலாம் என்று LTA கூறியுள்ளது.
இந்த விபத்து குறித்த காணொளியானது SGRV ADMIN என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 11-ம் தேதி அன்று காலை 8 மணி அளவில் மற்றும் அவனை 10 சந்திப்பில் நேராக சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது ஒரு கார் மோதி உள்ளது.
இந்த விபத்தால் வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த கார் மேலே எழும்பி மற்றொரு பாதையில் விழுந்தது. இதில் அதன் முன் பகுதி சுமார் 150 டிகிரி சுழன்றதோடு அதன் உட்புற பகுதியும் சேதம் அடைந்துள்ளது.
தகவல் தெரிந்து குடிமைப் பாதுகாப்புப் படையினரும் (SCDF), காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் 58 வயது ஓட்டுநர் மற்றும் 62 வயது பயணியும் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு வர வைத்து விட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது .
இந்த விபத்தில் 2 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், 51 வயதான ஓட்டுநர் ஒருவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை நிற வலதுபுறத் திருப்ப அம்புக்குறி போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்ட சந்திப்புகளில் வலதுபுறத் திருப்பங்கள் தொடர்பான விபத்துக்கள் சுமார் 40% குறைந்துள்ளதாக LTA கூறியுள்ளது.