சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஆடவருக்கும் நிறுவனத்திற்கும் $400,000 அபராதம் விதிப்பு..!!
லிட்டில் இந்தியாவில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட கடை வீட்டை சட்டவிரோதமாக புதுப்பித்த காரணத்தினால் 54 வயதான நபருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்ட செய்தியானது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர்புறம் மறு சீரமைப்பு ஆணையம் இன்று (ஏப்ரல் 22) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. லிட்டில் இந்தியா 32 டஸ்கர் சாலையில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட கட்டிடத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முயன்ற குற்றத்திற்காக 54 வயதான மாணிக்கம் நாகராஜன் மீது திட்டமிடல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த யூனிட்டின் உரிமையாளரான லயன் மேனேஜ்மென்ட் மாணிக்கம் நாகராஜனை அங்கீகரிக்கப்படாத பணிகளை மேற்கொள்வதற்காக அனுமதித்த குற்றத்திற்காக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் இல்லாத பணிகள் மற்றும் அத்தகைய பணிகளை மேற்பார்வையிட ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞரை நியமித்ததும் தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டையும் தண்டனை வழங்கும்போது நீதிபதி கருத்தில் எடுத்துக் கொள்வார் என தெரியவந்துள்ளது.
மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி அந்த கடை வீடு ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது மேலும் அதில் நிரந்தரமாக வசிக்கின்ற மாணிக்கம் நாகராஜன் 2022 இல் ஒரு நிறுவனம் மூலம் அதை வாங்கியுள்ளார்.
அந்த காலத்தின் போது அந்த கடை வீடு அதன் முக்கிய கட்டிடக்கலை அம்சங்கள் சிதையாமல் அதன் அசல் வடிவத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தரைத்தளத்தில் உள்ள அசல் முகப்பு ஏறத்தாழ ஆயிர 1913 மற்றும் 1914 க்கு இடையில் கட்டப்பட்ட ஒரு வழக்கமான குடியிருப்பு கடை வீட்டில் முகப்பிற்கு தற்போது எஞ்சிய மிகவும் அரிதான உதாரணமாகும்.
அந்த கடையின் முகப்பில் மையத்தில் ஒரு இரட்டை மரக் கதவும் அதன் இருபுறமும் மரச் சட்ட ஜன்னல்களும் செங்குத்தான இரும்பு கைப்பிடிகளும் இடம்பெற்றுள்ளது. இது அக்காலத்தில் வழக்கமான குடியிருப்பு கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
2023 ஜனவரியில் கருத்துக்களை பெற்ற பிறகு நகர்ப்புற மறுசீரமைப்பு குழுவானது அந்த இடத்திற்கு ஆய்வுக்காக சென்று சம்பந்தப்பட்ட திட்டங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இது போன்ற பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள் சிங்கப்பூரின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய சின்னங்கள் எனவும் அனைத்து திட்டங்களும் கடமையான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒருங்கிணைந்து முன்கூட்டிய அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தை மீறியதால் அந்த விலைமதிப்பற்ற வரலாற்று கட்டிடத்தில் அசல் கட்டமைப்பு நிரந்தரமாக சிதைவடைந்தது எதிர்காலத்தில் அது மீண்டும் கட்டப்பட்டாலும் அசல் வரலாற்று பொருட்களையும் அதனுடைய நம்பகத்தன்மையையும் மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று.
இது போன்ற பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தகுதி வாய்ந்த நிபுணர்களால் மேற்பார்வையிடப்பட வேண்டும் எனவும், அவற்றுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
திட்டமிடல் சட்டத்தை மீறுபவர்களுக்கு $500,000 வரை அபராதமும் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீறல்களுக்கு எதிராக சட்டத்தை தொடர்ந்த அமல்படுத்துவோம் எனவும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டறியும் பொதுமக்கள் அவற்றை அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களை சட்டவிரோதமாக இடிப்பதற்கும் புனரமைப்பதற்கும் ஆன தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு திட்டமிடல் சட்டம் திருத்தப்பட்ட பிறகு வழக்கு தொடரப்பட்ட முதல் வழக்கு இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட கடை வீட்டை சட்டவிரோதமாக புதுப்பித்த காரணத்திற்காக 54 வயதான ஆடவருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும் முறையே $250,000 மற்றும் $150,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த கடை வீட்டை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதற்கான பழுது பார்ப்பு செலவுகளையும் சொத்தின் உரிமையாளர் நிறுவனம், செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.