அவர் அந்த மறுசுழற்சி தொட்டிக்குள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது அந்த பதிவில் தெரியவில்லை.
பொதுமக்கள் மின்விளக்குகள், மின்கலங்கள், கணினிகள், கைபேசிகள், அச்சுப்பொறிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு கழிவுகளை அகற்றுவதற்காக மறுசுழற்சித் தொட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த மறுசுழற்சி தொட்டியானது ALBA என்ற கழிவு மறுசுழற்சி நிறுவனத்தால் கையாளப்படுகிறது.
இந்த பதிவுக் குறித்து ALBA நிறுவனம் கூறியதாவது: கழிவு மறுசுழற்சித் தொட்டிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதாகவும், கூடுதல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தொட்டிகளைப் பயன்படுத்துபவர்கள், மின்னணுக் கழிவுகளை எடுத்து செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
மேலும் மறுசுழற்சித் தொட்டிகளின் மேடையின் உயரத்தை அதிகப்படுத்தவும், மின்னணுக் கழிவுகள் சேகரிக்கப்படும் கால இடைவெளியை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.