அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..??

அமெரிக்காவில் பெரும் தீ விபத்து..!! அவசர நிலை அறிவிப்பு வெளியானது எங்கே..??

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் பல நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் வணிகக் கிடங்கு தீ விபத்து காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதிக்கு அருகில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் ஜூன் 17 ஆம் தேதியன்று இந்த பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட தனியார் குளிர்சாத க்ன கிடங்கில் விபத்தானது நிகழ்ந்துள்ளது. கிடங்கில் இருக்கும் 8.5 கோடி பவுண்டுகள் எடை உள்ள உறைந்த உணவுகள், எரியும் ஃபோம் இன்சுலேசன், உருகும் சோலார் பேனல்கள் மற்றும் அமோனிய கசிவு போன்ற காரணங்களால் தீயைக் கட்டுப்படுத்துவது என்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.

கிடங்குத் தீயினால் ஏற்படும் அடர்ந்த நச்சுப் புகை மற்றும் பிளாஸ்டிக் எரியும் நாற்றமம் காரணமாக ஒட்டுமொத்த பகுதியின் காற்றுத் தர மும் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புகையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பிற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 24 மணி நேர புகலிடங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை மற்றும் ரெட் கிராஸ் அமைப்பு அமைத்துள்ளது.

இந்நிலையில் கடுமையான இந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் உள்ளூர் அவசர நிலையையும், கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசோம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி முழுவதும் அவசர நிலை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறும் கலிபோர்னியா ஆளுநர் அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK