MOM இன் அதிரடி நடவடிக்கை..!! பணிப்பெண்களுக்கு விடுப்பு கொடுக்காத முதலாளிகள்..!!

MOM இன் அதிரடி நடவடிக்கை..!! பணிப்பெண்களுக்கு விடுப்பு கொடுக்காத முதலாளிகள்..!!

சிங்கப்பூரில் வேலை செய்யும் இல்லப்பணிப் பெண்களுக்கு கட்டாயம் விடுப்பு கொடுக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு இருக்கின்ற நிலையில் இதை முதலாளிகள் கடைபிடிக்காத காரணத்தினால் மனிதவள அமைச்சகம் (MOM) அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பணிப்பெண்களுக்கு விடுப்பு வழங்காத முதலாளிகள் ஒவ்வொரு ஆண்டுக்கும் கிட்டத்தட்ட 90 பேர் பிடிபட்டதாக மனித வள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாதந்தோறும் இல்ல பணிப் பெண்களுக்கு கட்டாயமாக விடுப்பு வழங்க வேண்டும் என்ற கொள்கை சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அத்தகையோருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுப்பு வழங்காத முதலாளிகள் கைது செய்த அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து டாக்டர் டான் அவர்கள் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தும் சட்டத்தின் கீழ் தவறு செய்கின்ற முதலாளிகளுக்கு $10,000 வரை அபராதம் மற்றும் அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.


சிங்கப்பூரில் இருக்கின்ற பெரும்பாலான முதலாளிகள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதாகவும் மனிதவள அமைச்சர் திரு டான் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு (2025) சிங்கப்பூரில் 316,900 வெளிநாட்டு இல்லப்பணிப்பெண்கள் இருந்தனர்.

2020 ஆம் ஆண்டு அந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை 247,400 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான முதலாளிகள் ஒவ்வோர் ஆண்டும் விதிமுறைகளை மீறுகின்றனர் என்பதை மனிதவள அமைச்சர் டாக்டர் டான் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK