சிங் போஸ்ட் - ஃபுல்லர்ட்டன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!! எதற்காக??
சிங்கப்பூர்: சிங் போஸ்ட் நிறுவனமும் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமமும் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக இன்று (மே 14) அறிவித்துள்ளன.
ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை முறையை இணைந்து உருவாக்கி, அதை பொதுமக்களுக்கு வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
சிங் போஸ்ட் நிறுவனத்தின் நாடு தழுவிய சமூக உள்கட்டமைப்பை, கிடங்குத் துறை ஆற்றல்களையும் புல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ, மருந்தக நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி சுகாதாரப் பராமரிப்புச் சமூகத்திற்கு சேவையாற்ற இந்தக் கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புக்கும் மருந்து விநியோகத்திற்குமான புத்தாக்க தேர்வுகளை உருவாக்கும் திட்டங்களும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்று ஃபுல்லர்ட்டன் குழுமம் கூறியுள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கும் மருந்துகளை விநியோகம் செய்யக்கூடிய ஆற்றல், சிங்கப்பூர் முழுவதும் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டுமென்ற புல்லர்ட்டன் ஹெல்த் நிறுவனத்தின் குறிக்கோளுக்கு ஆதரவாக இது இருக்கும் என்று நம்புவதாக சிங்போஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சோங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் 2026 ஆம் ஆண்டில் முப்படையும் சமூகத்தினரை அதிகம் கொண்டுள்ள நாடாக மாற இருக்கிறது. ஆகையால் மீள்திறன்மிக்க மருத்துவ விநியோகத்தொடர் தேவைப்படும். இந்த நேரத்தில் இங்குள்ள மக்கள் தொகையில் குறைந்தது 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களாக இருப்பார்கள் என்று சிங்போஸ்ட் கூறியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது சிங் போஸ்ட் அதன் தளவாடத் துறை சார்ந்த சேவைகளைப் பன்முகப்படுத்துவதற்கான ஒரு முக்கியப் படியாக கருதப்படுகிறது எனவும் சிங் போஸ்டர் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.