சிங்கப்பூரில் நடந்த கொலை..!!! ரத்த வெள்ளத்தில் கிடந்த உடல்..!!!
சிங்கப்பூரில் இன்று (24/09/2025) யிஷூன் பகுதியில் உள்ள ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிக அளவு சத்தம் ஏற்பட்ட காரணத்தினால் 67 வயதான சீனாவை சேர்ந்த நபர் அருகில் இருந்த 33 வயது மற்றும் 31 வயதுடைய தம்பதியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இரு வீட்டாருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் 67 வயதுடைய சீன நபர் தம்பதியினர் இருவரையும் கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.
இருவரையும் கத்தியால் குத்திய போது அதில் 31 வயதுடைய பெண் உடல் முழுவதும் ரத்த வெள்ளம் போல் இருந்தது. 33 வயது உடைய ஆண் கத்தியால் குத்த முயன்ற போது அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்து கத்தியுள்ளார்.
அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் இன்று (24/09/2025) காலை 7:25 மணிக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மூவரும் காயமடைந்து கிடப்பதை கண்டனர் அதில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் இருந்தனர்.