புக்கிட் படோக் சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம நபர்..!!
சிங்கப்பூர் : புக்கெட் படோக் வாகன நிறுத்தமிடத்தில் ஒரு நபர் 2 ரம்பங்களை ஏந்தியபடி சாலையின் நடுவே நின்றது அந்த பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. புக்கெட் படோக் தெரு 31 பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்திமிடத்தில் இந்த பரபரப்பு சம்பவமானது நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த காணொளி ஆனது இணையத்தில் பரவி வருகிறது. அதில் நீண்ட கை சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
பின்னர் அந்த நபர் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கேட்டு தன் தொடைகளின் மீது கைகளை வைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளார். சம்பவ இடத்தில் 2 காவல்துறை வாகனங்களும் காணப்பட்டன.
இந்த சம்பவம் குறித்த தகவலானது காவல்துறைக்கு மே 18ஆம் தேதி அன்று 9:10 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள ஒரு திறந்த வெளி வாகன நிறுத்தம் இடத்தில் 2 ரம்பங்களை வைத்திருந்த ஒரு மர்ம நபரைக் கண்டுள்ளனர். அந்த நபர் தனக்கு மற்றவர்களுக்கும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் அபாயம் இருந்ததால் அதிகாரிகள் தங்களது துப்பாக்கியால் எடுத்து ரம்பத்தை கீழே போடுமாறு எச்சரித்துள்ளனர்.
தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்த குற்றத்திற்காக 46 வயதுடைய அந்த மர்ம நபர் இறுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது.