விஜய்யிடம் உதவி கேட்டு செல்லமாட்டேன்: மிஷ்கின் பரபரப்பு
சென்னையில் நடந்த பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார். அப்போது, ‘லியோ’ படத்தில் நடிகர் விஜய்யுடன் குறித்து பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்தது. அவர் பேசும்போது,
“விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்தித்தபோது அவர் ஒரு சி.எம். அல்லது இரண்டு சி.எம். தான் ஜெயிப்பார் என சொன்னார்கள். ஆனால் அப்போதே அவர் ‘கண்ணியமாக வருவார்’ என்று சொன்னேன்.”
ஏனெனில் எனக்கு விஜய்யையும் தெரியும், உதயநிதியையும் தெரியும். இப்போதும் சொல்கிறேன், நான் எந்த உதவியும் கேட்டும் விஜய்யிடம் போகமாட்டேன். அவர் சிறந்த விஷயங்களை செய்ய போகிறார்.
விஜய்க்கு அனுபவம் இல்லை என சொல்கிறார்கள். அவர் உடன் அனுபவம் வாய்ந்த பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லித்தருவார்கள்” என்றார்.