பார்வை இழந்தோருக்கு புதிய நம்பிக்கை..!! AI கண்ணாடியின் அசத்தல் சாதனை..!!
சிங்கப்பூரில் மெட்டா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜூன் 9-ஆம் தேதி அன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் மூக்குகண்ணாடிகள் பயனர்களுக்கு எவ்வாறு கை கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள பார்வை இழந்தவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள், மூக்குகண்ணாடிகளைத் தயாரிப்பவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என louக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உடல் குறையுள்ளோர் அன்றாட வாழ்க்கையில் கூடுதல் சுதந்திரத்துடன் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட ரே-பான் மெட்டா, ஓக்லி மெட்டா மூக்குக்கண்ணாடிகள் எவ்வாறு உதவுகின்றன என்பது இந்த நிகழ்ச்சியில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு பொருளில் எழுதப்பட்டிருப்பதை படிப்பது, பொருட்களைக் கண்டறிவது, முன்பின் செல்லாத இடங்களுக்கு போய் வருவது, உடனுக்குடன் செய்தியைத் தெரிந்து கொள்வது போன்றவற்றிற்கு இவை உதவுகின்றன.
கண்முன் நிழலாடும் காட்சியை விவரித்தல், உடனுக்குடன் மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்ப சேவைகளுக்கு ஏஐயின் உதவியுடன் இயங்கும் இந்த கண்ணாடிகள் கைகொடுக்கின்றன.
‘என் கண்களாக இருங்கள்’ என்னும் பொருள் கொண்டால் “பீ மை ஐஸ்” எனும் செயலியைப் பயன்படுத்துவதற்கு கைபேசியை நாடாமல் மூக்குக்கண்ணாடிகள் மூலமாகவே உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு செயல் விளக்கத்தின் மூலம் விவரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்ட அமைச்சகத்தின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்துள்ளார்.
பயனர்களை முன்னிலைப்படுத்தி மெட்டா ரே-பான் மெட்டா , ஓக்ல மெட்டா போன்ற மூக்குக்கண்ணாடிகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.