மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய முயற்சி..!!!

மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய முயற்சி..!!!

சிங்கப்பூர்:பிரைன் டியூமர் சொசைட்டி லிமிடெட்டின் முதல் தொண்டு நிதி திரட்டும் இரவு உணவு நிகழ்ச்சி நேற்று (25.01.26) வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மொத்தமாக S$596,428 நிதி திரட்டப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் பாதி தொகை சிங்கப்பூர் டர்ஃப் மற்றும் பந்தய ஆணையம் மூலம் வழங்கப்பட்டது.திரட்டப்பட்ட நிதியின் முக்கிய நோக்கம், மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகும்.

 

இந்த திட்டத்தின் கீழ், மூளைக் கட்டி நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்களுக்கு பிரத்யேக மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார்.

இதன் மூலம் நோயாளிகள் சிக்கலான பின்விளைவுகளை தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், தேவையான சிகிச்சை வாய்ப்புகளை தவறவிடாமல் பெற முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த பத்து ஆண்டுகளில் தனது சமூக சேவை நடவடிக்கைகளில் இந்த நிதியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரைன் டியூமர் சொசைட்டி கூறியுள்ளது.

உள்ளூர் மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவது, நோயாளிகளின் உரிமைகளுக்கான வக்காலத்து முயற்சிகளை வலுப்படுத்துவது, புதுமையான சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, சிங்கப்பூர் மூளைக் கட்டி சங்கம் 300க்கும் மேற்பட்ட மூளைக் கட்டி நோயாளிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆதரவளித்து வருகிறது. இதன் மூலம், மூளைக் கட்டி நோயை எதிர்கொள்ளும் பயணத்தில் அவர்கள் தனியாக இல்லை என்ற உணர்வை வழங்குவதே சங்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK