சிங்கப்பூரில் புதிய தனியார் விடுதி அறிமுகம்.!! யாருக்கு?

சிங்கப்பூரில் புதிய தனியார் விடுதி அறிமுகம்.!! யாருக்கு?

சிங்கப்பூரில் மேல் நடுத்தர பிரிவு மூத்தோர்களுக்காக முதன்முறை புதிய தனியார் விடுதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Perennial Living எனும் அந்த விடுதி பாரி அவென்யூவில் அமைந்துள்ளது.

மூத்தோர்களுக்காக ஒரு அறைக்கு மாத கட்டணம் 8,900 வெளியில் இருந்து 17,000 வரை செலுத்தி தங்கிக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

260 மில்லியன் மதிப்புள்ள இந்த திட்டத்தில் உரிய உதவிகளுடன் கூடிய மூத்தோர் பராமரிப்பிற்கு 200 அறைகள் உள்ளன. 100 தாதிமை இல்லப்படுக்கைகளும் உண்டு.

ஓரறை அல்லது ஈரறை வசதியுடன் வீடுகள் உள்ளன இங்கு தங்குவோர் 24 மணி நேரமும் உதவியை நாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் மூத்தவர்களுக்கு ஏதுவான அழுக்காத தரைகளும் அவர்கள் கீழே விழுவதை கண்டறிய உதவும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கில மருத்துவம் பாரம்பரிய சீன மருத்துவம், மறுவாழ்வு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan