சிங்கப்பூர்ல நிலத்தடியில் வீடுகள் வரப்போதா..!!

சிங்கப்பூர்ல நிலத்தடியில் வீடுகள் வரப்போதா..!!

சிங்கப்பூரில் சுமார் 300 கிலோ மீட்டர் நீளம் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலத்தடியில் ரயில் சேவை பாதாள சாக்கடை மின்சார விநியோகம் ஆகியவற்றிற்கான கட்டமைப்பு தற்போது வளர்ந்து வருகிறது.

அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் 60 கிலோ மட்டர் நீளத்திற்கு சுரங்கங்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாக நகர சீரமைப்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் நிலத்தடி குடியிருப்புகள் கட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஆணையத்திடம் CNA கேள்வி எழுப்பியது.

தற்போது அதுபோன்று திட்டங்கள் ஏதுமில்லை என்று ஆணையம் பதிலளித்தது.

மாறாக ரயில் பாதைகள், நீர் தேக்கங்கள், கிடங்குகள் போன்றவற்றிற்கு நிலத்தடியில் கட்டமைப்புகள் உருவாக்குவதற்கு முன்னுரிமை அழைப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2024 இல் சிங்கப்பூரின் முதல் நிலத்தடை நீர் நீர்த்தேக்கம் பிடாடாரியில் செயல்பட தொடங்கியது.

பூங்கா ஒன்றின் அடியில் 9 மீட்டர் ஆழத்தில் இந்த நீர் தேக்கம் அமைந்துள்ளது. சுமார் 8,800 வீடுகளுக்கான நீர் விநியோகத்திற்காக பயன்படுகிறது.

 

2032-ல் கிரோஸ் ஐலண்ட் MRT பாதையில் இரண்டாவது கிங் ஆல்பர்ட் பார்க் நிலையம் கட்டி முடிக்கப்படும் என்ற தகவலை ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் அதிக ஆழத்தில் அமைந்துள்ள MRT நிலையமாக இது திகழும் என தெரிவித்தது. நிலத்திற்கு அடியில் 50 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பெருமையை பெற்றிருப்பது பென்கூலன் நிலையம் இது 43 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது.

 

வரும் காலங்களில் சிங்கப்பூரில் மழை பொழிவும் வெப்பமும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பாதசாரிகளுக்கு கூடுதல் நிலத்தடி பாதைகள் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் யோங் கிவெட் – யூ அறிவுறுத்தியுள்ளார்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan