சிங்கப்பூரில் மோசடி அதிர்ச்சி…!!!232 பேரிடம் காவல்துறை விசாரணை…!!!

சிங்கப்பூரில் மோசடி அதிர்ச்சி...!!!232 பேரிடம் காவல்துறை விசாரணை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீவு முழுவதும் காவல்துறையினர் நடத்திய சிறப்பு அமலாக்க நடவடிக்கை சிங்கப்பூரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையில், மோசடி மற்றும் பணமோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 232 பேர் போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரம் நீடித்த போலீஸ் நடவடிக்கை

காவல்துறை அறிக்கையின்படி, ஆகஸ்ட் 15 முதல் 28 வரை இரண்டு வாரங்களாக இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 83 பெண்களும்,149 ஆண்களும்,16 முதல் 72 வயதுக்கு உட்பட்டவர்கள் அடங்குவர்.

போலீசார் விசாரணையில், இவர்கள் 650க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது. முக்கியமாக,நண்பர்களைப் போல ஆள் மாறாட்டம் செய்தல்,போலியான முதலீட்டு சலுகைகள், வேலை தேடல் மோசடிகள்,மின் வணிக தளங்கள் வழியாக ஏமாற்றுதல்,அரசு அதிகாரிகளைப் போல போலி அடையாளம் காட்டுதல்,வாடகை மோசடிகள் என பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

பாதிக்கப்பட்டோரின் இழப்பு

இந்த மோசடிகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மொத்தத்தில் S$1.17 இழந்துள்ளனர்.இது சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

போலீசாரின் எச்சரிக்கை

சந்தேக நபர்கள் மீது மோசடி,பண மோசடி மற்றும் உரிமம் இல்லாமல் பண பரிமாற்ற சேவைகள் வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, தெரியாத நபர்களின் முதலீட்டு ஆலோசனைகள் அல்லது நிதி தொடர்பான சலுகைகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan