பள்ளிகளில் மின் சிகரெட் பயன்பாடா..!!!

பள்ளிகளில் மின் சிகரெட் பயன்பாடா..!!!

சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்க கல்லூரி வரை மின் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

எனவே கல்வி அமைச்சு பள்ளிகளுக்கு நிக்கோட்டின் சோதனை கருவிகளை வழங்கியுள்ளது.

2020க்கு முன்பு பள்ளிகள் உயர் கல்வி நிலையங்களில் மின் சிகரெட் பிடித்து சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட சம்பவங்கள் 50க்கும் குறைவாக இருந்தது.

2022 -க்கும் 2024 -க்கும் இடையே ஆண்டுக்கு சராசரியாக 3,100 மாணவர்கள் மின் சிகரெட் புகைத்து பிடிபட்டனர் என்றது கல்வி அமைச்சு.

அதே காலகட்டத்தில் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் எண்ணூர் மாணவர்களும் பிடிபட்டனர்.

பள்ளிகளில் நடக்கும் மின் சிகரெட் சம்பவங்கள் குறித்து அதிகாரிகளுக்கு இனிமேல் தகவல் தெரிவிக்கப்படும். செப்டம்பர் 1 முதல் மாணவர்களுக்கு பள்ளி அளவில் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தண்டனைகளின் வகை பின்வருமாறு:
பள்ளி மாணவர்களுக்கு:
🔷பள்ளியிலிருந்து தற்காலிக நீக்கம்
🔷 மறுவாழ்வு ஆலோசனை
🔷 பிரம்படி (ஆண் மாணவர்களுக்கு)

உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கு:
💠 தலைமைத்துவ பொறுப்பிலிருந்து நீக்கம்
💠 அபராதம்
💠 உபகாரச் சம்பளம் பறிப்பு

மின்சகாட்டுகளை பயன்படுத்தும் அல்லது விநியோகம் செய்யும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளது கல்வி அமைச்சு.

கல்வி நிலையங்களில் கண்காணிப்பு இனி அதிகமாக்கப்படும். மின் சிகரெட் தொடர்பான சம்பவங்களை தடுக்க சக மாணவர்களின் பங்கு இன்றியமையாதது என்றால் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan