சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!!
சிங்கப்பூர்: மலேசியா–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகள் குறித்த எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்,ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகளை தொடங்குவதற்கு மலேசியா கொள்கையளவில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இது செயல்படுவதற்கு இரு நாடுகளின் சம்மதமும் ஒருமித்த கருத்தும் அவசியம் எனக் கூறினார்.
முன்னதாக சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை அது தொடர்பாக எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) சட்டவிரோத டாக்சிகள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.