தமிழகத்தில் ஒரு லட்சம் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபாடு..!! எதற்கு..??
தமிழகத்தில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பதிவாகியுள்ள வாக்குகள் வருகின்ற திங்கட்கிழமை (மே 4) எண்ணப்பட உள்ளன.
இதற்காக தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 62 வாக்கு என்னும் மையங்கள் உள்ளன அந்த மையங்களில் உள்ள “ஸ்ட்ராங் ரூமில்” மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றன.
மே 4 அன்று காலை 8 மணி அளவில் அஞ்சல் வாக்குகள் முதலில் எண்ணப்படும். முதல் சுற்றின் முடிவுகள் காலை 9 மணிக்குள் வெளியிடப்படும் எனவும் நள்ளிரவுக்குள் அனைத்து தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணி முடிவடையும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய விவரங்களை இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை தனித்தனியாகவும் உடனடியாக தெரிந்து கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் கைபேசி செயலிகள் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
வாக்கு எண்ணுகின்ற மையங்களில் அதற்கு தேவையான மேசைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான நகரங்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் முக்கிய சாலைகள் ரயில் பேருந்து விமான நிலையங்கள் ஆகியவை காவல்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. வாக்கு என்ன படம் நாளில் எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்பதில் காவல்துறை மிகவும் கவனமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.