சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!!

சிங்கப்பூரில் திடீரென தீப்பற்றிய BMW கார்..!!

சிங்கப்பூரில் மே 1ஆம் தேதி பாசிர் ரிஸ் பிளாசாவின் தரைக்கு வாகனம் நிறுத்தம் இடத்தில் நின்று கொண்டிருந்த BMW கார் திடீரென தீப்பிடித்தது.

இதனைக் கண்ட முகநூல் பயணர் அன்னி லூவ், அவரது முகநூல் பக்கத்தில் கார் தீப்பிடித்து எரிவதை காட்டும் புகைப்படங்களையும் காணொளி பதிவுகளையும் மே 1 அன்று பதிவேற்றியுள்ளார்.

மே 1 இரவு சுமார் 7 35 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததை உறுதி செய்தனர்.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே பொதுமக்கள் தீயை அணைத்து விட்டதாகவும் மேலும் இந்த தீ சம்பவத்தினால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

Annie Luv முகநூல் பயனர் பதிவேற்றிய புகைப்படங்களில் BMW காரின் டிக்கியும் ஓட்டுநர் இருக்கை பக்க கதவும் திறந்திருந்ததும், காரின் மேற்பரப்பில் எறிந்து அதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லாததும் அந்த புகைப்படங்களில் தென்பட்டன.

ஆனால் தீயணைப்பு குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டதால் ஒரு வெள்ளை சாம்பல் படலத்தால் கார் மூடப்பட்டிருந்தது பல தீயணைப்பு வீரர்களும் சமவிடத்திற்கு விரைந்து வந்த அதன் பின் விளைவுகளை சரி செய்து கொண்டிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK