சிங்கப்பூரில் அதிகரிக்கும் ERP குறித்த போலி மின்னஞ்சல்..!! LTA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் ERP குறித்த போலி மின்னஞ்சல்..!! LTA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் பெயரில் போலியாக அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) எச்சரித்துள்ளது.

தங்களுக்கு செலுத்தப்படாத அபராதத் தொகையும் மின்னியல் சாலை கட்டணமும் (EP)இருப்பதாக கூறும் தகவல்களைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் LTA கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்று (மே 27) இது குறித்து பேஸ்புக்கில் ஆணையம் பதிவிட்டு இருந்தது. இது போன்ற போலி மின்னஞ்சல்களில் பொதுவாக அதை பெறுபவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.

அதன் பிறகு PayNow வழியாக பணம் செலுத்துமாறும், சிங்பாஸ் கணக்குகளில் உள்நுழையவும் கூறுவதாக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவே இதுபோன்ற போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புத் தளங்களை மட்டுமே பார்க்குமாறும், தங்களுக்கு ஏதேனும் அபராதம் எதுவும் இருக்கிறதா என்பதை ஒன்மோட்டாரிங் (One Motoring) இணையதளம் வழியாக மட்டுமே சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தகைய மின்னஞ்சல்களைப் பெறுவோர் எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ள எந்த ஒரு இணைப்புகளையும் தேர்வு செய்ய வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு LTA எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலப் போக்குவரத்து பெயரில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சலின் படங்களை ரெடிடதளத்தில் பயனர் ஒருவர் மே 26 ஆம் தேதி அன்று பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த அதிகாரபூர்வ விழிப்புணர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2019 ஆம் ஆண்டு பல்வேறு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் $4 மில்லியன் அதிகமான தொகை இழந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 37,308 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் இழந்த மொத்த தொகை $913.1 மில்லியன் ஆகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK