சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!! தேசிய சுற்றுச்சூழல் முகமை எச்சரிக்கை..!!
சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன. கடந்த மே 23ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 54 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய வாரத்தில் பதிவான 26 பதிவுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டில் (2026) பதிவான வாராந்திர பாதிப்புகளை மிக அதிகபட்ச அதிகரிப்பு இதுவே ஆகும்.
இது குறித்து தேசிய சுற்றுச்சூழல் முகமை(NEA) இணையதளத்தில் தரவுகளை வெளியிட்டுள்ளது. நேற்று (மே 25) இந்த ஆண்டு (2026) உள்ளூரில் மொத்த 683 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளது என்று அந்த தரவுகள் காட்டுகின்றன.
தற்பொழுது சில பகுதிகளில் 6 காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன. ஆனால் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புகள் மொத்தமாக பதிவான அபாயப் பகுதிகள் எதுவும் இல்லை.
ஜாலான் ஜராக், ஜாலான் லெகுப் மற்றும் செலேட்டர் டெரஸ் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 5 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் மிமோசா வேல் மற்றும் மிமோசா வாக் பகுதி, பிராடல் ஹில் பகுதி மற்றும் டெஃபு சவுத் ஸ்ட்ரீட் 1 ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் 3 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன.
மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலம் டெங்கு காய்ச்சலின் வழக்கமான உச்சகட்ட பருவம் என்பதால், வெப்பமான வானிலை ஏடிஸ் கொசுக்களில் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.