அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புக்கிட் பாதோக் பகுதியில் உள்ள 288A HDB தொகுதியில் இன்று (30.12.25) காலை தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தத் தொகுதியில் உள்ள ஒரு அலகின் படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து பதிவான ஆன்லைன் வீடியோக்களில், HDB தொகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியதை காண முடிகிறது.
மேலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மேல் தள அலகுகளின் வெளிப்புறப் பகுதிகள் கருகியிருப்பதையும், கட்டிடத்தின் தரை தளம் சாம்பலால் மூடப்பட்டிருப்பதையும் காட்டுகின்றன.
சம்பவ இடத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்ததாவது, இன்று(30.12.25) காலை சுமார் 10.55 மணியளவில்,16 மாடி HDB அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு படுக்கையறையில் தீ ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததாக கூறியது.
தீ சம்பவம் அந்தப் படுக்கையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டதாகவும், தீயை அணைக்க சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் இரண்டு நீர் பீரங்கிகளை பயன்படுத்தியதாகவும் SCDF தெரிவித்தது.
இருப்பினும், அதிக வெப்பநிலை மற்றும் புகை காரணமாக அலகின் பிற பகுதிகள் சேதமடைந்தன.
சிவில் பாதுகாப்புப் படை வருவதற்கு முன்னரே, அந்த அறையில் இருந்த நான்கு பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, அந்த HDB தொகுதியில் வசித்து வந்த சுமார் 20 பேரும் பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படுக்கையறையில் உள்ள மின்சார மூலத்திலிருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பணிமனையைப் பார்வையிட்ட பிறகு திரு சியாவ் தமது Facebook பக்கத்தில் பதிவிட்டார்.
வரும் 25ஆம் தேதி அந்த இலகு ரயில் சேவை ஒரு நாள் முழுக்க மூடப்படும்.
10 இரவுகளில் செய்யக்கூடிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்க அது வகைசெய்வதாக நிலப்போக்குவரத்து ஆணையத்தின் பொறியியலாளர் ஒருவர் கூறியதைத் திரு சியாவ் குறிப்பிட்டார்.
ஏழாண்டாய்த் தொடரும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை புதுப்பிப்புப் பணி நிறைவடையும் சூழலில் இருப்பதாகத் திரு சியாவ் கூறினார்.