வணிக நிறுவனங்களை ரத்து செய்த சிங்கப்பூர் சுற்றுலா வாரியம்..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் ஒரு குறிப்பிட்ட வணிக நிறுவனங்களின் உரிமங்களை தற்காலிகமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் ஆனது ரத்து செய்துள்ளது.
இதனால் புதிய பயண ஆர்டர்களை எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
காரணம் என்ன? நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகள் அல்லது வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியதற்காக 10 உள்ளூர் நிறுவனங்களின் வணிக உரிமங்கள் ரத்தானது.
நிறுவனங்களின் பெயர்கள்: ஆசியா குட் லைஃப், பீட்டல் பாக்ஸ் ஆசியா, ஃபாக்ஸ் பிரதர்ஸ் டிராவல், கோ சிட்டி பாஸ் ஆசியா, குலுலு, ஹூவாமே ஹாலிடேஸ், நேட்டிவ் இன்க், ரெய்னா டூர்ஸ் மற்றும் ASAP இன்டர்நேஷனல் டிராவல்.
வணிக நிறுவனங்கள் நிதியாண்டு முடிவடைந்த ஆறு மாதங்களுக்குள் நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அறிக்கையை சுற்றுலா வாரியம் வெளியிட்டிருந்தது. ஆனால் உரிமம் பெற்றவர்கள் அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
இந்த தடை செய்யப்பட்ட காலமானது இந்த மாதம் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். மேலும் நிறுவனங்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரையில் இந்த இடைநீக்க காலம் அமலில் இருக்கும்.
இந்த இடை நீக்க காலத்தில் பயண முகமைகள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் புதிதாக எந்த ஆர்டர்களையும் ஏற்க முடியாது.
நாட்டினுடைய சுற்றுலா துறையின் நற்பெயரை பாதுகாக்க இதன நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காது என்று சுற்றுலா வாரியம் தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் உரிமம் பெற்ற பயணம் முகமைகளின் பட்டியலை பார்க்க, சுற்றுலா வாரியத்தின் TRUST வலைதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தங்கள் வணிக உரிமங்கள் பற்றிய விசாரணைகளுக்கு பயண முகமைகள் stb_ta@stb.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மின்னஞ்சல் அனுப்பி தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.