சிங்கப்பூர் மக்களே உஷார்…!!

சிங்கப்பூர் மக்களே உஷார்...!!

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் போல ஆள்மாறாட்டம் செய்து போலி பரிவர்த்தனைகளை நடத்தி ஏராளமான பொதுமக்களை ஏமாற்றிய தகவலை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (24/09/2025) ஒரு பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது.

மோசடிக்காக பெரிய ஆர்டர்களை வழங்குவது போல் விளம்பரம் செய்து போலியான பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மேலும் சிங்கப்பூர் ஆயுத படைகள் போல ஆள்மாறாட்டம் மோசடி செய்த மூன்று சந்தேகத்திற்கு இடமாக வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு கூறிய கருத்து:
✓பொதுமக்களும் அனைத்து வணிகங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

✓சந்தேகம் ஏற்படும் படி ஏதேனும் ஒரு செயல் நடந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

✓இது போன்ற மோசடி நடப்பது இது முதல் முறை அல்ல எனவே பொதுமக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

✓மோசடியில் ஈடுபடுபவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்களை இருக்கும் விதமாக வணிகத்தின் மூலம் பல பொய்யான தகவலை அனுப்பி அதன் மூலம் பொது மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கின்றனர்.

பொதுமக்கள் இது போன்ற சம்பவங்களை சந்திக்க நேர்ந்தால் உடனே “Scamshield” என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று உதவிக்கு அழைக்கலாம்.

மேலும் Scamshield மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். இல்லையென்றால் பொதுமக்கள் மோசடி எதிர்ப்பு ஹாட்லைன் எண் 1799 ஐ தொடர்பு கொள்ளலாம்.

 

WHATSAPP CHANNEL LINK👉

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan