பேருந்தின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களில் முரண்பாடுகளைக் கண்டறிந்த பட ஆய்வாளர்கள் பேருந்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
உத்தரவின் படி அமலாக்க அதிகாரிகள் கோடாரியைப் பயன்படுத்தி பேருந்தின் தரையை உடைத்து சரக்கு பெட்டியைத் திறந்துள்ளனர். அதில் 3,200 க்கும் மேற்பட்ட அட்டைப்பெடிகளில் இருந்த கடத்தல் சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மலேசிய ஓட்டுநரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் மேற்கட்ட விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையினரிடம் ICA அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து ICA கூறியதாவது: நமது எல்லைகளின் பாதுகாவலர்கள் என்ற முறையில் சிங்கப்பூரின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், வர்த்தக மற்றும் சுங்க வசதிகளை மேம்படுத்துவதற்கும் நாங்கள் உறுதிபூண்டு உள்ளதாக கூறியுள்ளது.