இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு..!! 84 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு..!! 84 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டன. திடீரென புயல் வீசியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடரும் கனமழையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட சுமத்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 62 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் 95 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கிட்டத்தட்ட 65 பேரை காணவில்லை எனவும் தகவல் தெரிய வந்துள்ளது.

மேற்கு பகுதியில் உள்ள சுமத்ராவில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேரை காணவில்லை.

பலி எண்ணிக்கை மேலும் உயர்வு உயர வாய்ப்புள்ளது எனவும் அச்சத்தில் உள்ளனர்.

மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஆயறாமல் உழைத்து வருகின்றனர்.

சில பகுதிகளில் இருப்பிடமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள சாலைகளும் அடிப்படை வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு வசதிகளும் கூட துண்டிக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியில் வர முடியாத சூழலில் மக்கள் தவிக்கின்றனர்.

எனவே அவசரகால உதவியாளர்கள் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை ஹெலிகாப்டர் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK