சிங்கப்பூர்: செராங்கூன் நார்த் பகுதியில் உள்ள அல் இஸ்திகமாஹ் பள்ளிவாசலில் நேற்று(24.09.25) மாலை 5.15 மணி அளவில் ஒரு சந்தேகத்திற்குரிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும், சிங்கப்பூர் போலீசார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளிவாசல் மற்றும் சுற்றுப்பகுதியை பாதுகாப்புக்காக அடைத்தனர்.