தொண்டுழியர்களின் அர்ப்பணிப்பால் ஒளிர்ந்த சிண்டா திருவிழா..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சனிக்கிழமை (08.11.25) வாழ்நாள் கற்றல் கழகத்தில் சிண்டா தொண்டூழியத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் சிண்டா தலைவர் இந்திராணி ராஜா, தொண்டூழியம் சிங்கப்பூரர்களின் மரபணுவில் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது, “நம் நாடு சிறியது, வளங்கள் குறைவாக உள்ளன. ஆனால் ஒவ்வொருவரும் சமூக வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும்.அனைத்து பணிகளும் சம்பளத்திற்காக மட்டுமே இருக்க வேண்டியதில்லை” என்று கூறினார்.
சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்ததாவது, இந்த ஆண்டில் 600க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் 12 திட்டங்களில் 3,410 மணி நேரம் சேவையாற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் 400 பேர் மட்டுமே ஈடுபட்டனர் என்பதால், நிறுவனங்களின் இணைப்பு இதற்கு முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்திராணி, சிறந்த தொண்டூழியர்களாக சடேஸ் குமார் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய முகம்மது முஸ்தாக் வஃபீக் ஆகியோரின் பங்களிப்பை பாராட்டினார். சிறுவர்களுக்கு புத்தக வாசிப்பு, முதியோர் பராமரிப்பு, சமூக ஈடுபாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றில் இவர்களின் பங்களிப்பு சிறப்பானது என்று கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, தொண்டூழியம் தனிமையை குறைக்கிறது மற்றும் சமூகத்தை ஒன்றிணைக்கிறது. சிண்டா போன்ற அமைப்புகள் தொடர்ந்து நிதி மற்றும் ஆதரவுடன் செயல்படுவது மிக முக்கியம் என்றும்,திட்டங்கள் நீடித்த பயனளிக்க புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
