பணியாளர்களை ஏமாற்றிய கம்பெனிக்கு கிடைத்த பதிலடி..!!!
சிங்கப்பூரில் லாவண்டர் எம்ஆர்பி நிலையத்தில் இயங்கி வரும் ஜோலிபியன் உணவு நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதிக்கும் இந்த ஆண்டு தொடக்கத்திற்கும் இடையில் குறைந்தது 16 ஊழியர்களுக்கு EPF பணத்தை இந்த கம்பெனி செலுத்த தவறியுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணை நடத்திய போது நிறுவனத்தின் உரிமையாளரான ஷாருல் நஸ்ரின் முகமது டஹ்லான் நீதிமன்றத்தில் இன்று (24/09/2025) EPF சட்டம் தொடர்புடைய 34 குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தினால் நிறுவனத்தின் உரிமையாளர் பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஈபிஎப் தொகையான 2,10,000 செலுத்த தவறிய குற்றத்திற்காக 68,000 அபராதத்தை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு முன்னரே செலுத்த வேண்டும் என்று நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.