ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சோகக் கதை...!!

அனைவருக்கும் நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் சாதித்து விட மாட்டோமா என்ற எண்ணம் உள்ளது.
அப்படி தனது வாழ்வில் ஒரு முக்கியமான தருணத்தை நோக்கி எதிர்கொண்டு இருந்தவர்தான் ப்ரதிக் ஜோஷி.
ப்ரதிக் ஜோஷி தன்னோட மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த 6 வருசமா லண்டனில் வேலை பார்த்து PR கிடைத்தால் குடும்பத்தையே அழைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக லண்டனில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தார்.
இதற்காக லண்டனில் தன்னுடைய அழகிய குடும்பத்தை பிரிந்து 6 வருடங்களாக வேலை பார்த்தார்.
ஒருவழியாக அவர் செய்த அத்தனை தியாகங்களுக்கும் விடை கிடைத்தது. ஆம்.. அவருக்கு PR கிடைத்தது.
குடும்பத்தை அழைத்துச் செல்வதற்காக சந்தோஷமாக இந்தியா வந்தார்…
தன்னுடைய 3 குழந்தைகளையும் மனைவியையும் மகிழ்ச்சியாக ஒரு ஆகச்சிறந்த எதிர்காலத்தை கொடுக்க போகிறோம் என்ற நம்பிக்கையோடும் கனவோடும் கடைசியாக அவர் எடுத்த புகைப்படம் தான் இது…
அவர் கண்ட கனவு இறுதிவரை நிஜமாகவே இல்லை…
நேற்று நடந்த விமான விபத்தில் அத்தனை கனவுகளோடும் இருந்த ப்ரதிக் ஜோஷி குடும்பம் ஒட்டுமொத்தமாக சிதைந்து போனது..
தனது குடும்பத்தோடு எதிர்கால அத்தனை கனவுகளும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் இன்று இல்லை என்பதே மிகப்பெரிய துயரம்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
