சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்...!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் டிக்டாக் பயனர் acekang145, ரமலான் பண்டிகையான மார்ச் 21ஆம் தேதி மாலை நேரத்தில் சுமார் 7:30 மணியளவில் பேபர் மலைக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை வீடியோ எடுத்து அதை பதிவிட்டு இருந்தார்.

பேபர் மலையில் உள்ள சாலைகள் குறுகலானவை. அதில் ஒரு கார் ஓட்டுனர் சாலையை இடைமறிக்கும் விதமாக, காரை நிறுத்தி வைத்த காரணத்தினால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான இடத்தை நோக்கி காவல்துறை அதிகாரிகள் நடந்து செல்வதை அந்த வீடியோ பதிவில் தெரியவந்துள்ளது.

விசாரணையைப் போல் சட்ட வரோதமாக பேபர் மலையில் உள்ள சாலையில் ஒரு கார் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் வழிமறித்து நின்றதால் எந்த வாகனமும் அந்த சாலையில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்கள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர்.

வீடியோ பதிவு வெளியிட்ட அந்த பயனர் சட்டவிரோதமாக சாலையில் ஒரு கார் நிறுத்தப்பட்ட காரணத்தினால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றும் அறிந்து கொண்டார்.

இந்த வீடியோ குறித்து இணையவாசிகள் பலர் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறது. அந்த காரில் ஓட்டுநர் கடமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.

மார்ச் 21ஆம் தேதி அன்று இரவு மவுண்ட் பேபர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை மவுண்ட் பேபர் லீசர் குரூப், உறுதிப்படுத்தியது. ஒரு வழிச்சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பேருந்து செல்ல வழி இல்லாத காரணத்தினால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது தெரிவித்தனர்.

பேபர் மலைக்குச் செல்லும் சாலையின் இரண்டு பக்கமும் இரட்டை மஞ்சள் கோடுகள் இடப்பட்டுள்ளதாகவும் விதிமுறைகளின் படி எந்த நேரத்திலும் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை என்றும் தெரியவந்துள்ளது.

LTA இணையதளத்தின் படி, இரட்டை மஞ்சள் கோடுகளின் மீது வாகனங்களை நிறுத்தினால் 70 முதல் 150 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் OneMotoring இணையதளம் மூலமாக சட்டவிரோதமாக வாகனம் நிறுத்துபவர்கள் பற்றி புகார் செய்யலாம் என்று LTA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK